பிடித்தவை 10- கவிஞர் பா.நித்யாபாண்டியன்


கோவையைச் சேர்ந்த பா.நித்யாபாண்டியன் கவிஞர், எழுத்தாளர். ‘வ்ரோட் தமிழ்', ‘தங்கமங்கை’ இதழ்களில் பல்வேறு கட்டுரைகளும், ‘கணையாழி’, ‘நான்காவது தூண்’ உள்ளிட்ட இதழ்களில் நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறார். போர்ச் சூழலில் குழந்தைகள் படும் இன்னல்களையும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் பற்றியும் இவர் எழுதிய ‘எங்களுக்கானவை’ என்ற கவிதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தின் ‘சக்தி’ விருதும், தமுஎகசவின் வளரும் படைப்பாளர் விருதும் பெற்றிருக்கிறது. தற்சமயம் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்குப் பிடித்த பத்து இங்கே...

ஆளுமை: பாரக் ஒபாமா. ஒரு நாட்டின் அதிபராக மட்டும் அல்லாமல், ஒரு நல்ல மனிதனாக, நேசம் மிக்க கணவனாக, நல்ல தந்தையாக, பொறுப்புமிக்க குடிமகனாக அனைத்துச் சூழல்களிலும் தன்னை நிரூபித்த ஆளுமை.

கதை: சாதத் ஹசன் மாண்ட்டோவின் ‘கோல் தோ', ‘தோபா தேக் சிங்'. வைக்கம் முகமது பஷீரின் ‘பால்யசகி’, புதுமைப் பித்தனின் ‘பொன்னகரம்’.

கவிதை:
நெஞ்(சே) நினக்குநான் உரைத்தன நிலைநிறுத்தி(டவே)
தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்;
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்;
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்...
- பாரதி

x