தடுத்தார்கள்...  தானே வளர்ந்தேன்..!- சபதம் வென்ற தெலுங்குப் பேச்சாளர் ரேணுகாதேவி!


தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் பேச்சாளர்களைச் சொல்லுங்கள் என்றால், குமரி அனந்தன், சுப.வீரபாண்டியனில் ஆரம்பித்து பர்வீன் சுல்தானா வரையில் ஆயிரம் பேரைப் பட்டியல் போடலாம். அதுவே, தமிழகத்தின் ஆகச்சிறந்த தெலுங்கு பேச்சாளர் பெயரைச் சொல்லுங்கள் என்றால், ரேணுகாதேவியை மட்டுமே சொல்கிறார்கள்!

9 முறை எம்எல்ஏ, மும்முறை அமைச்சராக இருந்து தற்போது ஆந்திர சபாநாயகராக இருக்கும் கோடலி சிவபிரசாத் ராவ், இவரை ஆந்திரத்தில் மேடையேற்றிப் பேசவைத்து மகிழ்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். யார் இந்த ரேணுகா தேவி?

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியைச் சேர்ந்தவர். தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், பள்ளிக்காலத்திலேயே தமிழ் பேச்சுப்போட்டிகளில் பரிசுகளைக் குவித்தவர். அரசுப் பள்ளி ஆசிரியையான பிறகும் சொற்பொழிவு, பட்டிமன்றம், தன்னம்பிக்கை பேச்சு என்று தமிழில் கலக்கியவர். தொடர்ந்து 10 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை தனியார் தொலைக்காட்சிக்காக நேரடி வர்ணனை செய்துவருபவர்.

இப்படித் தமிழ் பேச்சாளராக ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட இவரை, தெலுங்குப் பேச்சாளராக மாற்றியதில் ‘தமிழ் ஆர்வலர்’களுக்குப் பெரும் பங்குண்டு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆண்டுதோறும் யுகாதி பெருவிழா (தெலுங்கு வருடப்பிறப்பு) சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 2012-ல், நடந்த விழாவுக்கு ரேணுகாதேவியையும் பேச அழைத்தார்கள். விழாவில் இவர் பேசிக்கொண்டிருந்தபோது, பொடியன் ஒருவன் வேண்டுமென்றே தொடர்ந்து விசிலடித்து இடையூறு செய்தான்.

x