பிடித்தவை 10 - கவிஞர், ஓவியர் அகிலா


அகிலா கோவையைச் சேர்ந்த கவிஞர். இவருக்கு ஓவியர், மனநல ஆலோசகர், திறனாய்வாளர் போன்ற முகங்களும் உண்டு. ‘சின்ன சின்ன சிதறல்கள்’, ‘சொல்லி விட்டுச் செல்’, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை!’ ஆகிய கவிதை நூல்கள், ‘நாங்கதாங்க பெண்கள்’ கட்டுரை நூல், ‘மிளகாய் பெட்டி’ என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு போன்றவற்றைத் தந்துள்ளார். வெகுஜன இதழ்களிலும் சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிக்குவிக்கிற இவர், இலக்கிய சந்திப்புகள், கல்லூரி நிகழ்வுகளில் இடையறாது பங்கேற்பவர். விருதுகள் பல வென்ற இவருக்குப் பிடித்தவை பத்து இங்கே:

ஆளுமை: ஒரு சில கருத்து வேறுபாடுகளுடன், மிகப் பெரிய ஆளுமையாகக் காந்தியை ஏற்கிறேன். காந்தியின் அகிம்சாவாதம் குறித்து, ‘ஒரு கண்ணுக்கு இன்னொன்று பதிலாகாது' என்னும் லூயிஸ் பிஷரின் சிந்தனை எக்காலமும் பொருந்தக்கூடியது.

கதை: ஜெயகாந்தனின் ‘அக்கினி பிரவேசம்’, உமா மகேஸ்வரியின் ‘மரப்பாச்சி’, தாஸ்தவேஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’.

கவிதை: பாப்லோ நெருடாவின் கவிதைகள், ‘Here I Love you’ என்னும் கவிதை. கலீல் ஜிப்ரானின் ‘என் பழைய மொழி’ என்னும் கவிதை.

x