பன்னிரண்டு வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார் ஆர்.பிரக்ஞானந்தா. சென்னையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், தனது அக்கா விளையாடுவதைப் பார்த்து செஸ் மீது ஆர்வமானார். படிப்படியாகப் பல போட்டிகளில் விளையாடி வந்தார்.
சமீபத்தில், இத்தாலியில் நடந்த நான்காவது சர்வதேச கிரெடின் ஓப்பன் செஸ் தொடரில் ஒன்பது சுற்றுகளில் விளையாடி, செஸ் விளையாட்டின் மிக உயரிய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் உலகிலேயே மிகக் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.
படித்து மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று நினைப்பவர் களுக்குப் பாடம் கற்பிக்கும் மாஸ்டராக ஆகியிருக்கிறார் இந்த கிராண்ட்மாஸ்டர்!