பிடித்தவை 10- கவிஞர், கதாசிரியர் ஜே.மஞ்சுளாதேவி


கவிஞர், கதாசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ஜே.மஞ்சுளாதேவி. ‘மானுடம் பாடிய வானம்பாடி’, `கண்ணதாசனின் கவிதை மொழி', `இலக்கிய முகங்கள்’, `வானம்பாடி கவிதைகள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, கவிதை, சிறுகதைத் தொகுப்பு என இலக்கியத்தின் பன்முகங்களிலும் முத்திரை பதிக்கும் இவர், கவிதைக்காக சிற்பி இலக்கிய பரிசு, திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது உள்ளிட்ட விருதுகளையும் குவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை கல்லாபுரம், அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவருக்குப் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: மேடைப்பேச்சில் தமிழ்த்திறம் காட்டி, அன்னைத் தமிழுக்குப் பெருமை செய்தவகையில் மு.கருணாநிதி, அபாரத் துணிச்சலுக்காக ஜெ.ஜெயலலிதா.

கதை: அம்பை எழுதிய, ‘வீட்டின் மூலை சமையலறை’ சிறுகதை. பால்யத்தில் படித்தது, இன்னும்கூட நெஞ்சில் நிழலாடுகிறது. இதேபோல் திருச்சி கலைச்செல்வியின் ‘ஆழம்’ சிறுகதை. இது ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை குறித்துப் பேசும். திரைமொழியில் இந்தத் துயரை ‘அறம்’ பேசுவதற்கும் முன்பே, எழுத்துலகில் பேசிய படைப்பு இது.

கவிதை: ‘டிஎம்சி என்பது உங்களுக்கு நீர் அளவு,

x