சர்காரும் சர்ச்சைகளும்!


‘மிஸ் இந்தியா’ பட்டம் சூடிய சென்னைப் பெண்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது லயோலா கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ், மும்பையில் ஜூன் 19-ல் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2018’ அழகிப் போட்டியில், பட்டம் வென்றிருக்கிறார். இவருக்கு, ‘உலக அழகி 2017’ பட்டம் வென்ற மானுஷி சில்லர் ‘மிஸ் இந்தியா’ பட்டத்தைச் சூட்டினார். இந்தப் போட்டியில் ஹரியாணாவைச் சேர்ந்த மீனாட்சி சவுத்ரி இரண்டாவது இடத்தையும், ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரேயா ராவ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ‘மிஸ் இந்தியா 2018’ பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்தன.

யோகா தினத்து அலப்பறைகள்!

ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக 2015-ல், ஐ.நா. அறிவித்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் யோகா தினம் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுவருகிறது. இந்த ஆண்டும் யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், நெட்டிசன்கள் வழக்கமான அரசியல் நையாண்டி, நகைச்சுவையுடன் யோகா தினக் கொண்டாட்டங்களை சமூக ஊடகங்களில் கிண்டலடித்திருந்தனர். யோகா தினத்தன்று மட்டுமே பெரும்பாலானோர் யோகா செய்வதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர்.

x