தூத்துக்குடி பாடம் ஒன்றே நமக்குப் போதுமானது!


சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மலைகளையும் வனங்களையும் குடைந்து இப்படியொரு சாலை போடவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகள் ஒருபக்கம்... விளை நிலங்களை எல்லாம் பறித்து அதன் மீது சாலை போடத்தான் வேண்டுமா என்ற விவசாயிகளின் குமுறல்கள் இன்னொரு பக்கம்.

இதற்கிடையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தையொட்டி எழுந்த பதற்றத்தின் நிழலையும் பசுமைவழிச் சாலை விவகாரத்தில் பார்க்கமுடிகிறது. ஸ்டெர்லைட் விவகா

ரத்தில் மக்களின் உணர்வுகளை உடனுக்குடன் மதித்து, அவர்களுக்கு நெருக்கமாய் நின்று பேசி, திறந்த மனதுடன் அவர்களின் கருத்தை அறிந்து அரசு செயல்பட்டிருந்தால், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், பரிதாப உயிர்பலிகளும் நிகழ்ந்திருக்காது. ‘போராட்டத்தைத் தூண்டிவிட்டவர்கள் சமூக விரோதிகள்’ என்ற குற்றச்சாட்டுக்கும், காவல் துறையின் தொடர் கைது நடவடிக்கைக்கும் அவசியம் இருந்திருக்காது.

தூத்துக்குடி பாடம் ஒன்றே நமக்குப் போதுமானது. பசுமைவழிச் சாலை விவகாரத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்புவது உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் தானா அல்லது அவர்களது வேதனையைக் கிளறிவிட்டு அரசுக்கு எதிராக இன்னொரு போர்க்களத்தை அரங்கேற்ற, வேண்டாத சக்திகள் திட்டமிடுகின்றனவா என்பதை உடனடியாக அரசு ஆய்ந்தறிய வேண்டும்.

x