குரல் எழுப்ப... குடி சிறக்கும்
சோபியா
readers@kamadenu.in
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் காமராசர் பல்கலைக்கழக அதிகாரிகள் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை நீண்டதும், முந்திக்கொண்டு ஆளுநரே ஒரு விசாரணைக் கமிட்டி அமைத்ததும் நினைவிருக்கலாம். கூடவே, தமிழக அரசும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை முடிந்த நிலையில் ஆளுநர் அமைத்த சந்தானம் கமிட்டியின் அறிக்கையை பொதுவெளியில் வெளியிடத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். தூத்துக்குடி கலவரம் காரணமாக, சிபிசிஐடி விசாரணை அறிக்கையும் வெளிவராமல் போய்விட்டது.