மண்ணில் இப்படி மனிதரும் உண்டோ!
என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
சுற்றுச்சூழலுக்காக அக்கறைப்படும் ஒரு சாமானியர்!
பெட்ரோல், டீசல் நுகர்வில் உலகளவில் மூன்றாவது இடத் திலிருக்கிறது இந்தியா. நாளொன்றுக்கு 4.5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை காலிசெய்கிறார்கள் இந்தி யர்கள். ஓர் இந்தியர் ஆண்டொன்றுக்கு 1.8 டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறார். கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் வெளியேற்றும் நாடுகளில் நான்காவது இடத்தி லிருக்கிறது இந்தியா! கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் 4.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல…