பிடித்தவை 10- கவிஞர், எழுத்தாளர் செம்மலர்


இடதுசாரி இதழ்களில் எழுதிக்குவிப்பவர் செம்மலர். மார்க்சிய போராளியான இவர் மாதர் சங்கத்திலும் தீவிர செயற்பாட்டாளர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு தலைவராக இருந்த கேப்டன் லக்ஷ்மி சைகாலின் மகள், ‘சுபாஷினி அலி'யின் ஆங்கிலப் புத்தகத்தை ‘இஸ்லாமியப் பெண்களின் பாதுகாப்பில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் தலையீடுகளும், போராட்டங்களும்’ எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஊடகவியலாளர் சாய்நாத் எழுதிய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் இவரது எழுத்தில் அடுத்தடுத்து வர இருக்கின்றன. நீண்டகால திருப்பூர் வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்டு, அண்மையில் நாமக்கல்லில் குடியேறி இருப்பவரின் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: எளிய சொற்களின் ஊடே, வலிமைமிகு கருத்துகளை முன்னெடுத்தவர். பாட்டாளி மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

நூல்: எத்திராஜூலு தமிழுக்கு மொழிபெயர்த்த ஏழு தலைமுறைகள். அலெக்ஸ் ஹேலி எழுதிய ஆங்கில நூலின்மொழி பெயர்ப்பு இது. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இன இளைஞனது பரம்பரை பற்றி பேசும் இந்நாவல், இரு நூற்றாண்டுகளின் வேதனை நிறைந்த வாழ்க்கையைக் காட்டும்.

கதை: வடசென்னை மக்கள் வாழ்வியல் அழகைப் படம் பிடித்துக் காட்டும் கரன்கார்க்கியின் `கருப்பர் நகரம்’. அதே போல், குழந்தையின்மை பிரச்சினையின் ஆழத்தைப் பேசும் பெருமாள் முருகனின் `மாதொருபாகன்’ நாவல்.

x