பிளாஸ்டிக் தடை சாத்தியமா? - ஏனென்றால் பிளாஸ்டிக்... பெட்ரோலியமும்கூட!


பிளாஸ்டிக்கைத் தடை செய்து அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன் என எப்போதுமே கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு சுற்றுச்சூழலுக்குத் தோழமையான குரல் கேட்பது வரவேற்புக்குரியது.

அதேசமயம் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது ‘கேரி பேக்’, பிளாஸ்டிக் டம்ளர் போன்ற பொருட்களை ஒழிப்பதோடு முடியும் விஷயம் மட்டும்தானா என்கிற கேள்வியும் எழுகிறது. தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு அறிவிப்பின் மூலம், பூமியை விழுங்கிக்கொண்டிருக்கும் பூதத்தின் ஒற்றை ரோமத்தில் லட்சத்தில் ஒரு சிறு புள்ளியைத் தொட முனைந்திருக்கிறோம்; அவ்வளவுதான்! ஏனெனில், பிளாஸ்டிக் எனப்படுவது பிளாஸ்டிக் மட்டுமல்ல, அது உலக நாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் பெட்ரோலியத்தின் இன்னொரு வடிவமும்கூட!

இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நொடியில் லேசாகப் பார்வையைத் திருப்புங்கள். ஒற்றை பிளாஸ்டிக் பொருளாவது நிச்சயம் கண்களில் சிக்கும். ஏனெனில் இது பிளாஸ்டிக் யுகம். 21-ம் நூற்றாண்டின் வளர்ந்த அத்தனை தொழில்நுட்பங்களுக்கும் மூத்த தொழில்நுட்பம் பிளாஸ்டிக் தொழில்நுட்பமே. பிறந்த குழந்தைக்குத் தாயின் முலைக் காம்புக்குப் பின்பாக முதலில் சுவைக்க பால் ரப்பரை கொடுப்பதிலிருந்தே தொடங்குகிறது பிளாஸ்டிக்கின் நெடும் பயணம். அதுமட்டுமா... அதிகாலையில் நம் கரம் பிடிக்கும் பல் விளக்கும் பிரஷ்ஷில் தொடங்கி பேஸ்ட் குப்பி, சோப்புக் கவர், ஷாம்பு கவர், சவரம் செய்யும் ரேஷர், சவர லோஷன் குப்பி, தேங்காய் எண்ணெய் டப்பா, குடிநீர் பாட்டில், பால் பாக்கெட், பிஸ்கெட் பாக்கெட், சாம்பார் மசாலா கவர், கோதுமை மாவு பாக்கெட், தோசை மாவு கவர், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் வாழைஇலை, சிகரெட் பாக்கெட், லைட்டர் சாதனம், டீக்கடை தொடங்கி டாஸ்மாக் வரையில் புழங்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், சோடா, குளிர்பான புட்டிகள், கடைசியாக ‘காண்டம்’ வரை அத்தனையும் பிளாஸ்டிக் தானே. மீண்டுமொருமுறை வாசித்தீர்களானால் புரியும்... மேற்கண்ட எதுவுமே நீண்டகாலம் வைத்துப் பராமரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல. அத்தனையும் உபயோகித்த பின்பு தூக்கி எறியும் நாசகாரப் பொருட்களே. இதை எல்லாம் எப்படி ஒழிக்கப் போகிறோம்?

ஏன் இந்த அறிவிப்பு?

x