கல்விக்காகப் போராடும் காந்திஜி


திருப்பூர் மாவட்டம் அங்கேரிப்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் காந்திஜி. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மழலையர் வகுப்பில் தனியார் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்ட இவனுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர பள்ளிக்குச் சென்ற காந்திஜியை, இருபதாயிரம் ரூபாய் கட்டணம் கேட்டு வெளியே அனுப்பிவிட்டது பள்ளி நிர்வாகம். விளையாட்டு, யோகா உள்ளிட்ட இதர விஷயங்களைக் கற்பிப்பதற்காக இந்தக் கட்டணம் என்று கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தனது தந்தையுடன் காந்திஜியும் களத்தில் இறங்கிவிட்டான். ‘என்னைப் படிக்க உள்ளே விடுங்க’ என்று எழுதப்பட்ட ஸ்லேட்டுடன் பள்ளி வாசலிலேயே நின்று தன் கல்வி உரிமைக்காகப் போராடியிருக்கிறான் இந்தச் சிறுவன்! 
-படம்: இரா.கார்த்திகேயன்

x