பிளாஸ்டிக் எதிர்ப்பில் பாலிவுட் நடிகைகள்!


உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்த்து பாலிவுட் நடிகைகள் பலரும் சமூக ஊடகங்களில் #BeatPlasticPollution என்ற ஹாஷ்டாக்கில் கருத்துகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இதில் நடிகை கங்கனா ராணாவத் தலையில் பிளாஸ்டிக் கவர் அணிந்து வெளியிட்டிருந்த விழிப்புணர்வு வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்தது. அவரைத் தொடர்ந்து, நடிகைகள் ஆலியா பட், அதிதி ராவ், ஜூஹி சாவ்லா போன்றவர்களும் பிளாஸ்டிக் எதிர்ப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர்.

அன்று ‘சாய்வாலா’ இன்று ‘தர்பூஸ்வாலா’

பாகிஸ்தானின் தேநீர் கடையில் பணியாற்றிவந்த இளைஞர் அர்ஷத் கான். இவரது புகைப்படம் இவரது நீலக் கண்களின் பிரகாசத்தால் இரண்டு ஆண்டுகளுக்குமுன் சமூக ஊடகங்களில் வைரலானது. அதேபோல, தற்போது கராச்சி சந்தையில் தர்பூஸ் வெட்டும் இளைஞரின் புகைப்படமும் அவரது அழகான தோற்றத்தால் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. இந்தியாவின் இளம்பெண்கள் பலரும் ‘சாய்வாலாவைத் தொடர்ந்து தர்பூஸ்வாலா! இப்படிப்பட்ட அழகான இளைஞர்களை அறிமுகப்படுத்தும் நமது அண்டை நாட்டுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்’ என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அந்த இளைஞரின் பெயர் முகம்மது அவைஸ் என்றும், அவர் பழ விற்பனையாளர் அல்ல, கராச்சியின் ஸியாவூதின் மருத்துவக் கல்லூரி மாணவர் என்றும் அவரது நண்பர் இன்ஷால் சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பாடப்புத்தகத்தில் பாலிடிக்ஸ்!

x