அரேபிய ரோஜா 15: ராஜேஷ் குமார்


மஹிமாவும் ஹம்தாவும் உடம்பில் எந்த விதமான பதற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல், ரோலர் சூட்கேஸ்களைத் தள்ளிக்கொண்டு விமான நிலையத்தின் பிரதான வெளிவாசல் நோக்கி நடந்தார்கள். ஹம்தா முணுமுணுப்பாய்ப் பேசினாள்.

‘‘ப்ளக் கார்டைப் பாத்தீங்களா மஹிமா?’’

‘‘ம்... பார்த்தேன்... ‘மஹிமா வெல்கம். வீ ஆர் ஹியர்’ அந்த வாசகங்களைப் படிக்கும்போது ஒரு கட்டளைதான் தெரியுது. ஆட்களும் சரியில்லை. ஏதோ தமிழ்நாட்டு அரசியல் அல்லக்கைகள் மாதிரி இருக்காங்க...’’

“அல் அராபத் டெக்னாலஜி பீப்பிள் இப்படியா இருப்பாங்க? இங்கே நிலைமை சரியில்லைனு இப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே?’’

x