மரத்துப்போயிருந்துச்சு...இப்பத்தான் சொரணை வந்திருக்கு!- தொடர்ந்து வெடிக்கிறார் பிரகாஷ்ராஜ்!


தனது தோழி கௌரி லங்கேஷ் கொலை தனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அதற்காக நியாயம் கேட்ட தனக்கு வந்த அச்சுறுத்தல்கள், தூத்துக்குடியில் பலியான வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்காமல் மவுனமானது, கர்நாடகத் தேர்தல் முடிவுகள், பாஜக-வுக்கு ஆதரவாகப் பேசுவதாக ரஜினி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு... எனக் கடந்தவாரம் அனல் பறக்க பேசியிருந்த பிரகாஷ்ராஜ், இந்த வாரமும் மடைதிறந்த வெள்ளமாய் மனம் திறக்கிறார்.

இவ்வளவு பேசுகிறீர்களே... நீங்கள் என்ன மக்கள் பிரதிநிதியா?

“தேர்ந்தெடுக்கப்பட்டாதான் மக்களோட பிரதிநிதின்னு அர்த்தம் இல்ல. அவர்களில் ஒருத்தனா நின்னாலே நான் அவங்க பிரதிநிதிதான். ஒரு நடிகனா எனக்குப் பிரபலம் கொடுத்திருக்காங்க. வசதியான வாழ்க்கையைக் கொடுத்திருக்காங்க. அவங்க கொடுத்த பிரபலத்தை நன்றிக்கடனாக்கி, அவங்க சார்பா நான் கேள்விகள் கேட்கிறேன். அவ்ளோதான். கேள்வி கேட்கிறதுக்குத் தைரியமும் சமூக அக்கறையும் போதும். பதில் சொல்றதுக்கு நேர்மையும், பொறுப்பும் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மையும் பொறுப்பும் இருந்துட்டா, நான் சினிமாவில் ஜாலியா நடிச்சிட்டிருப்பேன். இப்படி மூன்று மாதம் படப்பிடிப்புக்குப் போகாமல் கர்நாடகத்து கிராமங்களில் நின்னு பேசிட்டிருக்க மாட்டேன். இது காலத்தின் தேவை.

சோஷியல் மீடியாவில் அரசியல் கருத்துச் சொல்வதால் மட்டுமே மாற்றம் வந்துவிடுமா?

x