சிலை மீட்பில் இருக்கும் சீக்ரெட்!
பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளிநாடுகளில் இருந்தும் கோயில் சிலைகளை மீட்டு வரும் அபூர்வங்கள் அதிகம் நடக்கின்றன. அதேசமயம் சிலைகளை மீட்ட உடனேயே, “இது 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் மதிப்புடையது” என போலீஸ் தரப்பிலிருந்தே எந்த வித தர மதிப்பீடும் இல்லாமல் சிலைகளின் விலை மதிப்பைப் பிரகடனம் செய்கிறார்கள்.
இந்தச் செய்திகளின் பின்னணியை விசாரித்தால் வேறொரு திடுக் தகவலைச் சொல்கிறார்கள். இதுபோன்ற சிலைகளையும் கலைப் பொருட்களையும் மீட்கும்போது அதன் மதிப்புக்கு ஏற்ப சன்மானம் அளிக்கப்படும். தகவல் கொடுத்தவரில் தொடங்கி காவல் துறையினர் வரைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இந்தச் சன்மானத்தை வழங்கலாம். இப்படிச் செலவிடப்படும் தொகைக்கு தணிக்கை எதுவும் கிடையாது. இதைப் பயன்படுத்தி, சிலைகள் மீட்பு விவகாரத்தில் உதவி செய்ததாக ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர் சிலருக்குக் கணிசமான அளவில் சன்மானம் அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
சரக்கு ஓட்டும் ஆளும் கட்சி!