பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி விடுத்த ‘ஃபிட்னஸ்’ சவாலை ஏற்றதிலிருந்தே தொடர்ந்துநெட்டிசன்ஸ் அவருக்கு விதவிதமான சவால்களை ட்விட்டரில் விடுத்துவருகின்றனர். அப்படிக் கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கச் சொல்லி விடுத்த #Fuel Challenge சவால் சென்ற வாரம் ட்விட்டரில் வைரலானது. இந்தச் சவாலில், பிரதமரை பெட்ரோல் விலையைக் குறைக்கச் சொல்லி கேரள இளைஞர்கள் தண்டால் எடுக்கும் படமும், தென்னை ஓலையில் வண்டி ஓட்டும் படமும் வைரலாகின.
ஹர்பஜன் சிங்கும் கருகிய சமோசாக்களும்!
சென்னை சூப்பர் கிங்ஸின் சுழல் சிங்கம் ஹர்பஜன் சிங்,பிட்னஸ் சவாலில் பங்கேற்றார். ‘இன்று 1,500 கலோரிகளைக் குறைத்துவிட்டேன்’ என்று சிரிக்கும் ஸ்மைலியுடன் ஒரு தட்டில் ஒன்பது கருகிப்போன சமோசாக்கள் இருக்கும் புகைப்படத்தையும் போட்டிருந் தார். அந்த சமோசாக்கள் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே-யிடம் தோற்ற ஏழு அணிகளையும் சிஎஸ்கே-க்கு எதிராக தவறான முடிவுகளைக் கொடுத்த இரண்டு அம்பயர்களையும் குறிப்பதாக நெட்டிசன்கள் கிண்ட லடித்தனர்.
“இப்ப எதுக்காக வந்துருக்கீங்க..?”