தூத்துக்குடிக்கு விடிவு காலம்… கதிராமங்கலத்துக்கு எப்போது? 365 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்!


தூத்துக்குடியைப் போலவே நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது கதிராமங்கலம். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி தொடங்கிய இந்த அற வழிப் போராட்டம், அடக்குமுறைகள் தொடங்கி ஆசை வார்த்தைகள் வரை அத்தனைக்கும் அசராமல், தனது ஓர் ஆண்டை நிறைவு செய்தி ருக்கிறது. இதோ இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழத் தொடங்கி யிருக்கும் இந்தத் திங்கள் கிழமை யில் கதிராமங்கலம் அமைதிப் போராட்டம் தனது 381-வது நாளைத் தொட்டிருக்கிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விவசாய நிலங்களில் பெட்ரோலியக் குழாய்களைப் பதிக்கும் திட்டங்களை முற்றிலும் கைவிடும்வரை போராட்டத்திலிருந்து பின்வாங்கு வதில்லை என்று உறுதியுடன் இருக்கி றார்கள் கதிராமங்கலம் மக்கள்.

இத்தனை ஆண்டுகளாகப் காதுகுத்து, குலதெய்வ வழிபாடு, ஊர்ப் பொது விசேஷங்கள் என்று களை கட்டி வந்த கதிராமங்கலத்தின் அய்யனார் கோயில் திடல்தான் இந்த அறவழிப் போராட்டத்தின் மையக் களம். டெல்லியின் ஜந்தர் மந்தரைப் போல, சென்னையின் சேப்பாக் கத்தைப் போல டெல்டாவின் போராட்டக் களத்தின் மையப்புள்ளியாகியிருக்கிறது கதிராமங்கலம் - அய்யனார் கோயில் திடல்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கதிராமங்கலம் கடைத் தெருவில் ஓ.என்.ஜி.சி கிணற்றில் புதிய குழாய் பதிக்க முயன்றபோதுதான் இங்கே முதன் முதலில் மக்கள் போராட்டம் துவங்கியது. அப்போது, பின்வாங்குவதுபோல போக்குக்காட்டிய ஓ.என்.ஜி.சி, இரு நாட்களுக்குப் பிறகு ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸாரைக் குவித்து ஊரையே தனிமைப்படுத்திவிட்டு, அனைவரையும் வீட்டுக்குள் அடைத்துவைத்து, குழாய் பதிக்கும் வேலையை நடத்திமுடித்தது. அடக்கு முறையின் தொடக்கம் இதுவே. பின்பு சில மாதங்கள் கழித்து, ராம் என்பவர் வயலில் எண்ணெய்க் குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதும், மீண்டும் மக்கள் திரண்டு போராடினார்கள். அப்போது தடியடி நடத்தி, வீடு வீடாகப் புகுந்து மக்களைக் கைது செய்தது போலீஸ். அப்போது அடக்குமுறைக்கு எதிராக அய்யனார் கோயில் திடலில் தொடங்கிய அறப்போராட்டம்தான் இன்று வரை தொடர்கிறது.

இங்குள்ள மக்கள் தங்களுக்குள் கலந்து பேசி, ‘சிலர் மட்டும் போராட்டக் களத்தில் இருந்தால் போதும்; மற்றவர்கள் பிழைப்பைப் பார்க்கலாம்’ என்று முடிவெடுத்து சுழற்சிமுறையில் போராட்டத்தில் பங்கேற்றுவருகிறார்கள். காலை 11 மணியளவில் திடலில் கூடும் மக்கள், மதியம் இங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு மாலையில் வீடு திரும்புகிறார்கள். ஆனால், இந்த அமைதிவழி போராட்டத்தை நடத்துபவர்களின் மீதும் வழக்குகள் பாய்ச்சியிருக்கிறார்கள்.

x