அரேபிய ரோஜா 14: ராஜேஷ் குமார்


மஹிமாவின் ரத்த ஓட்டத்தில் சந்தோஷம் கலந்தது. அது ஒரு ஏர்போர்ட் என்பதையும், சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து உச்சபட்ச டெஸிபலில் பேசினாள்.

“என்னங்க... உங்க போனுக்கு என்னாச்சு? கடந்த ஒரு மணி நேரமா ட்ரை பண்ணிட்டுருக்கேன்?’’

மறுமுனையில் சகாதேவ் சிரித்தான்.

“ஸாரி மஹிமா... நேத்து ராத்திரி என் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்ததில் செல் போனுக்குக் கொஞ்சம் சேதம். ரெஸ்பாண்டிங் சுத்தமாய் இல்லை. இப்ப நான் பேசிட்டு இருக்கிறது என்னோட ஆபீஸ் கலீக் ஒருத்த ரோட போன். இந்த போன் நம்பரை சேவ் பண்ணிக்க. ஏதாவது அவசரம்னா இந்த செல் நம்பருக்கு போன் பண்ணு. அதுக்குள்ள என்னோட போனை சரி பண்ணிடுவேன்!’’

x