ட்ரம்பை வம்புக்கு இழுத்த பிபிசி!


பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் ஹேரி - மேகன் மார்க்லே திருமணம் மே 19 அன்று இங்கிலாந்தின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு வந்திருந்த கூட்டம், ஜனவரி 2017-ல், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த கூட்டத்தைவிட அதிகம் என்று பிபிசி செய்தி நிறுவனம், ட்விட்டரில் ஒரு படத்தைப் பதிவுசெய்திருந்தது. இந்தப் பதிவால் சமூக ஊடகங்களில் ட்ரம்ப் ட்ரோல் செய்யப்பட்டார். அமெரிக்கர்களும் இந்தப் பதிவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.

அக்கா - தங்கை அடேங்கப்பா சேட்டை!

நடிகை தீபிகா படுகோன், தனது தங்கை அனிஷா படுகோன் தன்னைக் கிண்டலடித்து அனுப்பியிருந்த மீம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், தன் அக்கா வீட்டில் எப்படியிருப்பார், வெளியில் எப்படியிருப்பார் என்பதை இரண்டு நாய்களின் படங்களுடன் பகிர்ந்து கிண்டலடித்திருந்தார் அனிஷா. இந்தப் படத்தை #sistergoals என்ற ஹாஷ்டாக்குடன் பலரும் பகிர்ந்திருந்தனர்.

பிட்னஸ் சவாலுக்கு ட்விட் செய்த பிரதமர்!

x