உறவுகளை ஒன்று சேர்த்த ஒரு புகைப்படம்!- குமரியில் ஒரு நெகிழ்ச்சி சங்கமம்!


மடிக் கணினிகளும் கைபேசிகளும் நம்மையும் அறியாமலேயே நம்மை முற்றாக ஆக்கிரமித்துவிட்டன. இதனால், முகநூலிலும், ட்விட்டரிலும் மணிக்கணக்கில் விவாதிக்கும் நாம், உறவுகளுக்காகச் சில நிமிடங்களை ஒதுக்கக்கூட யோசிக்கிறோம். அத்துடன் கால ஓட்டமும் சேர்ந்துகொள்ள, குடும்ப உறவுகளின் பந்தம் தொலைந்து, கூட்டுக்குடும்ப சித்தாந்தமும் சிதைந்து வருகிறது. மூலைக்கொரு முதியோர் இல்லம் உதிப்பதும் இதன் வெளிப்பாடு தான். ஆனால், இப்படியான மனிதர்களுக்கு மத்தியில் ஐந்து தலைமுறைச் சொந்தங்கள் தேடிப்பிடித்துச் சந்தித்து உறவுகளைப் புதுப்பித்துக் கொண்ட அதிசயமும் நடந்திருக்கிறதே!

நாகர்கோவிலை அடுத்த சரல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சவரிமுத்து - மரியேந்திரம்மாள் தம்பதி. இவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். இவர்களில் தொடங்கி இவர்களின் வாரிசு வழிவந்த ஐந்து தலைமுறைச் சொந்தங்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி குமரி மாவட்டம், சீதப்பாலில் நடந்தது. அங்குள்ள மலையடிவார ரிசார்ட் ஒன்றில் சங்கமித்த இந்த உறவுகளின் எண்ணிக்கை 250 - க்கும் அதிகம்!

இதுகுறித்த தகவலறிந்து நாம் அங்கு சென்றபோது, ஓடி வந்து நம் கைகளைப் பற்றிக்கொண்டு, “நீங்க எனக்கு மாமாவா... சித்தப்பாவா..?” விழிகளை விரித்து ஆர்வமாகிறான் ஒரு குட்டிப் பையன். நாம் புன்னகையை உதிர்க்க... வாஞ்சையுடன் சிறுவனின் கரம் பற்றிய பெரியவர் ஒருவர், “இவாளு பத்திரிகையில் இருந்து வந்துருக்கா…” என்றார்

“ஓ அப்டியா... எதுக்கு தாத்தா?”

x