அரேபிய ரோஜா 13: ராஜேஷ் குமார்


விமானம் ஒடுதளத்தை முத்தமிட்டு ஒரு ‘ப்ளாக் பேன்த்தர்’ காரைப் போல் வழுக்கி ஓடி வேகம் குறைந்து நின்றது. அடுத்த சில விநாடிகளில் விமானத்தின் முன்புறமும் பின்புறமும் படிகள் பொருத்தப்பட பயணிகள் இறங்கினார்கள்.

மஹிமா ஐந்தாவது நபராய் விமானப் பணிப்பெண்களின் வியாபாரப் புன்னகைகளை இலவசமாய் வாங்கிக்கொண்டு, விமானத்தி

னின்றும் வெளிப்பட்டாள். உடம்பின் எல்லா பாகங்களையும் ஒருவிதமான பதற்றம் ஊடுருவியிருப்பதை மஹிமா உணர்ந்தாள். தன்னிடம் தமிழில் பேசிய அந்த விமானப் பணிப்பெண் ஹம்தா பார்வைக்குத் தட்டுப்படுகிறாளா என்று திரும்பிப் பார்த்தாள்.

அவளைக் காணோம்.

x