அரேபிய ரோஜா 12: ராஜேஷ் குமார்


சென்னை விமான நிலையத்தின் ‘செக் இன்’ சடங்குகளை நேர்த்தியாய் முடித்துக்கொண்டு, ஏழாவது வாயிலுக்கு அருகில் இருந்த லெளஞ்ச்சில் ஓடுதளத்தைப் பார்த்தபடி குரோமியம் தடவிய நாற்காலியில் உட்கார்ந்தாள் மஹிமா.

எதிரே இருந்த மின்னணுப் பலகை அடுத்த சில மணி நேரங்களில் பறக்கப்போகும் விமானங்களைப் பற்றி பச்சை சிவப்பு நிறங்களில் மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தது. லுஃப்தான்ஸா விமானம் ஒன்று இரை எடுக்கும் கழுகைப் போல் லாவகமாய் கீழே இறங்க, அதற்கு நேர் எதிரில் இருந்த ஓடுதளத்தில் எமிரேட் விமானம் ஒன்று ஆகாயத்தை நோக்கி எம்பியது.

மஹிமா தன்னுடைய சந்தன நிற மணிக்கட்டில் அப்பியிருந்த அனலாக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

நேரம் ஐந்து மணி.

x