சொட்டாங்கல் – தமிழச்சி தங்கபாண்டியன்


வேப்பஞ்சக்கு

“வெரசா பொறக்கு செமதி. ஆண்டாளு வர்றங்குள்ள”னு என்னய விரட்டிக்கிட்டே வேப்பம்பழம் பொறுக்குவா சக்கம்மா.

வெடச்சுக்கிட்டு நிக்கற மாதிரி ரெண்டு பக்கமும் சடை போட்டு ஊதாகலர் ரிப்பன்ல அத மடிச்சுக் கட்டிருப்பா.

“இப்படிக் கழுத விட்டய மாரி வெடச்சுக்கிட்டு சடை போட்டா மண்ட கனக்காதா”ன்னு ஒரு வாட்டி முத்தழகு கேட்டதுக்கு “கழுத விட்டயக் கைல எடுத்தயாக்கும்”னு நொடிச்சா.

x