இலாகா இழந்த இரானி!
செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றது முதலே சர்ச்சைதான். ‘தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகார அட்டை ரத்தாகும்’ என்ற இவரது சமீபத்திய உத்தரவு பெரும் சர்ச்சையானது. பிறகு இந்த விஷயத்தில் பிரதமரே நேரடியாகத் தலையிட்டு ஸ்மிருதி இரானியின் உத்தரவை வாபஸ் பெறவைத்தார். இதையடுத்துத் திரைக் கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்ட விழா
விலும் ஸ்மிருதியின் அணுகுமுறை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 55 கலைஞர்கள் குடியரசுத் தலைவர் கையால் விருதைப் பெறமுடியாமல் விழாவையே புறக்கணித்தனர். இந்த நிலையில்தான், ஸ்மிருதி வசமிருந்த செய்தி ஒலிபரப்புத் துறை பறிக்கப்பட்டு ராஜ்ய வர்தன் ரத்தோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லாலுவின் ‘சைவ’ சித்தாந்தம்!