காவிரி வரைவு அறிக்கை வரவேற்கத்தக்கதே!- மூத்த பொறியாளர் வீரப்பன் பேட்டி


மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் காவிரி செயல் திட்ட வரைவு அறிக்கை, தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் தொடங்கி பலரும் அறிக்கையின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரும் காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கலில்  நீண்ட அனுபவம் கொண்டவருமான பொறியாளர் அ.வீரப்பன், காவிரி செயல்திட்ட வரைவு அறிக்கையை வரவேற்கிறார். குறிப்பாக,  `இந்த அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையானது’ என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார். அவரிடம் இதுதொடர்பான கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டோம்.

பொதுவாக மத்திய - மாநில அரசுகள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் நீங்கள், காவிரி செயல் திட்ட வரைவு அறிக்கையை வரவேற்பது ஆச்சரியமாக இருக்கிறது. அறிக்கையின் உண்மை நிலையைக்  கூற இயலுமா?

சமீபகாலமாகவே எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எல்லா விஷயங் களையும் ‘எதிர்ப்பு அரசியல்’ என்கிற ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார்கள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வுப் பார்வையில் பார்ப்பதில்லை. அனைத்திலும் அரசியல் கலக்கிறார்கள். இந்த அறிக்கையின் மீது எழுந்துள்ள எதிர்ப்பும் அதன் விளைவாக வந்ததே. நம்முடைய அடிப்படையற்ற யூகங்களையும் செவி வழிச் செய்திகளையும் தாண்டி வரைவு அறிக்கை ஏறக்குறைய சரியாகவே வந்துள்ளது. மேலும் இந்த அறிக்கை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்ட எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. சொல்லப்போனால், இது 98 சதவீதம் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது.

குறைகளே இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியுமா?

x