’நடப்பது எமெர்ஜென்ஸி ஆட்சியா?’- ‘ஆபரேஷன் கர்நாடகம்’ எழுப்பும் அதிர்ச்சிக் கேள்விகள்!


கர்நாடகத்தில் அரங்கேறிவரும் ஜனநாயகப் படுகொலையை ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியுடன் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் ‘எமர்ஜென்ஸி’ ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வி நாடு முழுவதும் பரவலாகப் பேசுபொருளாகியிருக்கிறது!

கர்நாடகத்தில் பாஜக-வை ஆட்சியமைக்க கவர்னர் விடுத்த ‘அவசர கால’ அழைப்பு, ஆட்சிக்காகக் கூட்டணி சேரும் சந்தர்ப்பவாதம், எம்.எல்.ஏ-க்களைச் சுண்டியிழுக்கும் சூழ்ச்சிகள் என நொடிக்கு நொடி காட்சிகள் மாறுகின்றன. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளும் தார்மீக தர்மங்களும் தவிடுபொடியாக்கப்பட்டுவிட்டன.  அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக நடத்தும் ‘பைலட்’ திட்டமாகவே இதையெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்!

நடந்து முடிந்திருக்கும் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 38, மற்றவை இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. பிரச்சாரம் முழுவதும் தேவகவுடாவைத் திட்டித் தீர்த்த காங்கிரஸ், பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக முந்திக்கொண்டு அவரது மகனுக்கு ஆதரவு கொடுத்தது. தேர்தலுக்கு முன் குமாரசாமி கூட்டணிக்குத் தயாராக இருந்தபோது, பழைய பகையால் தட்டிக் கழித்த சித்தராமையா இப்போது சத்தமின்றி கைகட்டி நிற்கிறார். 104 இடங்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தவர்களுக்குக் கிடைக்காத ஆட்சி, 38 இடங்களைப் பிடித்த தனக்குக் கிடைக்கப்போகும் கனவில் மிதக்கிறார் குமாரசாமி.

விதி வலியது!

x