சாமியாராய் இருந்தவருக்கு சாமி புரொமோஷன்!- இப்போது இப்படித்தான் இருக்கிறது பிரேமானந்தா ஆசிரமம்!


பத்திரிகைகள் முதல் சினிமா வரையில் அத்தனை ஊடகங்களிலும் கொடிகட்டிப் பறந்த பெயர் ‘பிரேமானந்தா!’. இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா, இலங்கை உள்நாட்டுக் கலவரத்தின்போது திருச்சி பாத்திமா நகருக்கு வந்து 1989-ல், ஒரு ஆசிரமத்தை உருவாக்கினார். அங்கு, அருளாசி, அருள்வாக்கு போன்றவற்றுடன் வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, விபூதி வரவழைப்பது, வெறும் கையிலிருந்து விபூதி, குங்குமம் எடுப்பது போன்றவைகளை நிகழ்த்திக்காட்டி உலகப் பிரபலமானார். கூடவே, சில சமூகப்பணிகளையும் ஆற்றினார்.

முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டுப் பக்தர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்ட பிரேமானந்தாவுக்கு எதிராக 1994-ல், புற்றீசலாய் புகார்கள் புறப்பட்டன. அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. அதில், 14 வன்புணர்வு வழக்குகள், ஒரு கொலை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 66.40 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியே வந்து வாதாடியும் பலனில்லை. உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்துவிட. சிறையில் இருக்கும்போதே உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2011 பிப்ரவரி 21-ல், மரணமடைந்தார் பிரேமானந்தா.

தற்போது பிரேமானந்தா ஆசிரமம் எப்படியிருக்கிறது என்று அறிந்து வரலாம் எனப் புறப்பட்டேன். திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியி லிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிரேமானந்தா ஆசிரமம். திரும்பிய திசையெல்லாம் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ நிறுவனங்கள் நிறைந்திருக்கிற

பாத்திமா நகரின் உள்பகுதியில், பலநூறு ஏக்கரில் அமைந்திருக்கிறது இந்த ஆசிரமம். சாலையோரமாக அமைந்திருந்தாலும் உள்ளே வெளிநபர்கள் நடமாட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்!

x