குணச்சித்திரத் திலகம்


அமர்க்களமான அறிமுகம் சினிமாவில் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. மணிமாலா இதற்கு விதிவிலக்கு என்றுதான் சொல்லவேண்டும். 1963-ல் வெளிவந்த ‘பெரிய இடத்துப்பெண்’ படத்தில் குஸ்தி வாத்தியாரின் மகளாக அதிரடியாகச் சிலம்பம் சுழற்றியபடி அறிமுகமானர் மணிமாலா. “எங்கே என்னோடும் கொஞ்சம் மோதிப்பார்” என்று தனது நீண்ட கூந்தலை அள்ளி முடிந்தபடி மணிமாலாவுக்கு எதிரில் வந்து நிற்பார் கிராமத்து எம்.ஜி.ஆர்.

‘கட்டோடு குழலாட ஆட… கண்ணென்ற மீனாட ஆட..’

- என்று அந்தப் படத்தில் பாடி ஆடியபடி கிராமத்து வாய்க்காலில் குளித்து, தங்கை ஜோதிலட்சுமியுடன் அழகு மயிலாக நனைந்தபடி மணிமாலா வரப்பில் நடந்துவர, இவர்களோடு எம்.ஜி.ஆரும் இணைந்துகொள்வார். எம்.ஜி.ஆர் விரும்பும் முறைப்பெண்ணாக நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்களையும் தன்னை விரும்பும்படி செய்தார் மணிமாலா. அடுத்த ஆண்டே வெளியான ‘பணக்கார குடும்பம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்குத் தங்கையாக வந்தார். தொழிலாளர்களின் உழைப்பின் பெருமையையும் ஒற்றுமையையும் எடுத்துரைக்கும்

‘ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

x