பிடித்தவை 10: கீதாபிரகாஷ், கவிஞர்


திருக்குறளைக் கதைப் பாடல்களாக்கி, குழந்தைகளுக்கு பரதம் கற்றுக்கொடுக்கும் கீதாபிரகாஷ் கவிஞரும் கூட. ‘ஜனுக்குட்டியின் பூனைக்கண்கள்’ என்னும் இவரது கவிதைநூல் ஈரோடு தமிழன்பன் விருது, திருப்பூர் ரோட்டரி சங்கத்தின் சக்தி விருது உள்பட ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளது. கருந்துளை, புன்னகை, கீற்று உள்ளிட்ட சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிவருபவரின் கவிதைகள் பெண்கள், குழந்தைகளின் உலகைப் பேசுபவை. `பரதம் புத்துணர்ச்சிக்கு… கவிதைகள் சமூகநலனுக்கு… பள்ளிக்காலம் தொட்டே இவை இரண்டும் என் அடையாளம்’ என்பவரின் பிடித்தவை பத்து இங்கே!

ஆளுமை: தந்தை பெரியார். சுயமரியாதையை விதைத்து, மூடநம்பிக்கையை ஒழித்து, பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பகுத்தறிவு பகலவனை விஞ்சி யாரும் இல்லை.

கதை: மீன்காரத் தெரு ...கீரனூர் ஜாகீர் ராஜா எழுதியது.

கவிதை: “குண்டு விழுகிறது வீடுகள் சிதறுகின்றன’’ எனத் தொடங்கும் கவிதை. பிராங்க்ளின் குமார் எழுதியது.

x