“காலா போன்ற காளான்கள் எல்லாம் காணாமல் போகும்” என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். “தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உண்டு” என்கிறார் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. ரஜினியோ, “காலம் கனியட்டும்; காத்திருப்போம்... ” என்கிறார். அவர், காலத்தைச் சொல்கிறாரா, அல்லது மருமகன் தனுஷ் தயாரித்த ‘காலா’வைச் சொல்கிறாரா? என்பதுதான் தொடர்ச்சியாக ரஜினியைப் படித்து வருபவர்களின் பெருத்த சந்தேகமாய் இருக்கிறது!
‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா?” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன் முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும். ‘தனிக்காட்டு ராஜா’ வெளிவந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தன் வழி எதுவென்று ரஜினிக்கும் புலப்படவில்லை; அவரை அறிந்தவர்களாலும் அந்த வழியை அறிய முடியவில்லை!
கட்டாயத்துக்கு ஆளான ரஜினி
தேர்தல் சமயத்தில், தான் கொடுத்த கடைசி நேர ‘வாய்ஸ்’கள் கலகலத்துப் போனதால், சிறிது காலம் அரசியல் பேசாமல் இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில்தான் அவரது ‘கோச்சடையான்,’ ‘லிங்கா’, ‘கபாலி’ படங்கள் வெளிவந்தன. ‘கோச்சடையான்’ எடுபடாமல் போன ஃபார்முலா என்பதை ரஜினியே ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்த