கூகுள் அசிஸ்டென்ட்டின் அசத்தல் அறிமுகம்!


கான் விழாவில் கங்கனா!

2018, கான் திரைப்பட விழாவில், கங்கனா ரணாவத்தின் ‘என்ட்ரி லுக்’ புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யா சாச்சி வடிவமைத்த கறுப்புவண்ணப் புடவையை அணிந்து வந்த கங்கனா, ரசிகர்களின்மனங்களைக் கொள்ளையடித்தார். கங்கனாவின் நடிப்பில், ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கைச் சித்திரமாக எடுக்கப்பட்டிருக்கும் ‘மணிகர்னிகா’ திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

வைரலாகும் கர்நாடகத் தேர்தல்!

கர்நாடகத் தேர்தலின் சூடு ட்விட்டரில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. சித்தராமையா மோடிக்கு ட்விட்டரில் சவால் விடுத்ததையடுத்து, தற்போது # CongressForKarnataka என்ற ஹாஷ்டாக் சென்ற வாரம் வைரலானது. மே 12 அன்று நடந்த கர்நாடகத் தேர்தலின் முடிவுகள் மே 15–ல் வெளியாகின்றன.

x