பிரதமருக்கு சவால்விட்ட முதல்வர்!


பிரதமருக்கு சவால்விட்ட முதல்வர்!

கர்நாடகாவின் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது, மைசூரில் மே 1 அன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் பற்றி, எழுதிவைத்துப் படிக்காமல், ராகுல் காந்தியால் 15 நிமிடங்கள் பேச முடியுமா?’ என்று சவால்விடுத்தார். பிரதமரின் இந்தச் சவாலுக்கு ட்விட்டரில் பதலளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘எடியூரப்பா ஆட்சியின் சாதனைகளை எழுதிவைத்ததைப் பார்த்துப் படித்தாவது உங்களால் 15 நிமிடங்கள் பேச முடியுமா?’ என்று எதிர் சவால்விடுத்தார். இதைத் தொடர்ந்தும் மோடியை விமர்சித்து வரிசையாக சித்தராமையா பதிவிட்ட ட்வீட்களால் ட்விட்டரே போர்க்களமானது.

மோடியின் ஃபேஸ்புக் சாதனை!

உலக அளவில் பேஸ்புக்கில் அதிகப் பயனர் களால் பின்தொடரப்படும் தலைவர் என்ற புகழை அடைந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இப்போது மோடியை 4 கோடியே 27 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் பின்தொடர்கிறார்கள். 2 கோடியே 45 லட்சம்பேர்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பின்பற்றுகிறார்கள். ஆசியாவில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால், ஆசிய நாடுகளின் தலைவர்களே அதிகம் பின் தொடர்வோர் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

x