இது மாநில தேர்தல் அல்ல... பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்!- பல்ஸ் பார்க்கும் பலே கட்சிகள்


பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய தலைவர் தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள்..!

ஓட்டுவேட்டைக்காக கர்நாடகாவுக்குப் படையெடுத்திருக்கும் அரசியல்வாதிகளின் பட்டியல் இது. மே 15-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது தெரிய‌ப்போவது, ‘கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?' என்கிற கேள்விக்கான விடை மட்டுமல்ல... ‘இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?' என்பதற்கான உத்தேச பதிலும்தான்! அதனால்தான், அரக்கப் பரக்க ஓடி வந்து இங்கே ஓட்டு வேட்டை நடத்துகிறார்கள்.

சித்தராமையாவுக்கு செக்

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள‌ 224 தொகுதிகளுக்கும் வருகிற மே 12-ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், எதிர்க்கட்சியான‌ பாஜக 224 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 222 தொகுதிகளிலும், மஜத கூட்டணி 221 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.கர்நாடகாவில் பெரும்பான்மையாக வசிக்கும் தலித், லிங்காயத், ஒக்கலிகா ஆகிய சமூகத்தவரின் வாக்குகளைக் கவர, ஒவ்வொரு கட்சியும் இந்த மூன்று சமுதாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. தலித், முஸ்லிம் வாக்குகளைப் பெற காங்கிரஸுக்கும், மஜத - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும் கடும் போட்டி! பாஜக-வோ முழுக்க நனைந்த கதையாக, ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை.

x