சாம்லிங்கின் சரித்திர சாதனை


இந்திய வரலாற்றில், தொடர்ந்து அதிகமான ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிப்பவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங். டிசம்பர் 12 1994 அன்று முதல் முறையாக முதல்வர் பதவியேற்ற சாம்லிங், கடந்த ஏப்ரல் 29-ம் தேதியுடன் 23 ஆண்டுகள், 4 மாதங்கள், 17 நாட்களை நிறைவு செய்திருக்கிறார்.

இதன்மூலம் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவின் சாதனையை முறியடித்துள்ளார் சாம்லிங். இவரது சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் தனிநபர் வருமானமும் கல்வியும் பெருமளவு வளர்ந்துள்ளது. சாம்லிங் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் எதிர்கட்சிகளின் வலுவின்மையால் அடுத்தும் அவரே ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் இருக்கிறார்.

x