”எடப்பாடியின் அதிகாரப்பூர்வ ஏஜென்ட் திவாகரன்!”- டிடிவி தினகரன் தடாலடி பேட்டி


தினகரனுக்கு எதிராகத் தோள்தட்டிக் கிளம்பியிருக்கும் திவாகரன், தனது ஆதரவாளர்களைப் படை திரட்டுவதில் தீவிரமாய் இருக்கிறார். இவரது நடவடிக்கைகளுக்கு ஓரக்கண்ணால் பச்சைக்கொடி காட்டும் ஆளும் கட்சி, தனது அதிகாரப்பூர்வ ஏட்டில் தினகரனை ’திகார்காரன்’ என்று கிண்டலடிக்கிறது. இதையெல்லாம் தனது வழக்கமான பாணியில் சிரித்தபடி உள்வாங்கிக்கொண்டே தனக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள சூறாவளி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் தினகரன்.

கடந்தவாரத்தில் கொங்கு மண்டலத்தில் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண நிகழ்ச்சிகள், மாற்றுக் கட்சியினர் அமமுக-வில் இணைந்த நிகழ்வுகள் எனப் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்த தினகரன் தருமபுரிக்கும் வந்தார். அவரிடம் “காமதேனுக்காக ஒரு பேட்டி...” என்று கேட்டதும், “ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து பேசவெல்லாம் நேரமில்லையே..!” என்றார் சிரித்தபடி. “வேனில் உங்களோடு வந்தால் பேசலாமா?” என்றோம். “அப்படியா...” என்று முதலில் இழுத்தவர், பிறகு ``சரி, ஏறிக்கொள்ளுங்கள்” என்றார். லேசாகத் தூறல் போட்டு பகலில் சுட்டெரித்த வெயிலுக்கு வானம் பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருக்க... எங்களது டெம்போ டிராவலர் கிருஷ்ணகிரி ரோட்டில் பயணப்பட்டது.

வழிநெடுகிலும் தூறலில் சுகமாய் நனைந்து வெக்கை தணித்துக் காத்திருந்த தொண்டர்கள் தினகரனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஆங்காங்கே அவர்களுக்கு உற்சாகமாய் கைகூப்பியபடியே நமது கேள்விகளையும் எதிர்கொண்டார்.

தமிழகத்தின் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி பற்றி உங்களது அண்மைக் கருத்து?

x