ரத்தக்கொதிப்பு என்ன செய்யும்?


சில மாதங்களுக்கு முன்பு, ஓர் இளைஞர் என்னிடம் வந்தார். முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த வாலிபர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவர் சொன்னார், "டாக்டர், கடந்த ஒரு வாரமா எனக்குத் தாங்க முடியாத தலைவலி. ஒர்க் டென்ஷன்லே இருக்கும்னு நெனச்சி, தலைவலி மாத்திரை போட்டுக்கிட்டேன். வலி விட்டபாடில்லை. இப்போ ரெண்டு நாளா வலது பக்கம் கைகால் முழுக்க பலவீனமா ஃபீல் பண்றேன். வாய் லேசா குழறுது. நேரா நடக்க முடியலே... நடை தள்ளாடுது. பயமா இருக்கு, டாக்டர்! எனக்கு என்ன ஆச்சுன்னு நீங்கதான் செக் பண்ணிச் சொல்லணும்!”

பரிசோதித்தபோது அவருடைய ரத்த அழுத்தம் 180/110 மி.மீ. மெர்க்குரிக்கும் அதிகமாக இருந்தது. இது ரத்தக்கொதிப்பின் மூன்றாம் நிலை. இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய தொந்தரவு! அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், மூளையில் ஒரு பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்திருந்தது. அதுதான் அவருடைய பிரச்சினைக்குக் காரணம் என்பது புரிந்தது. நல்லவேளையாக அவரிடம் காணப்பட்ட ஆரம்பகட்ட அறிகுறிகளில் அவர் உஷாராகி, சிகிச்சைக்கு வந்துவிட்டார். இல்லையென்றால், முழுமையான பக்கவாதம் வந்து நிறையவே சிரமப்பட்டிருப்பார்.

மெத்தப் படித்தவர்களே தங்கள் உடல் தகுதிக்கு ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டும் என்பதை அறியாமலும், தங்கள் ரத்த அழுத்தம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளாமலும் அலட்சியமாக இருக்கும்போது, படிக்காதவர்கள் நிறைய இருக்கும் நம் நாட்டில், ரத்தக்கொதிப்பு ‘ஐபிஎல் குத்தாட்டம்’ போடுவதில் ஆச்சரியமில்லை.

கோபம் வந்தால்..?

x