அடுத்ததும் மோடி ஆட்சிதான்! - போட்டுப் பொளக்கிறார் பவர் ஸ்டார்!


சத்தமே இல்லாமல் ஒரு சரித்திரப் புரட்சி நடந்து போச்சு! ‘இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே)’ யின் தமிழ் மாநிலத் துணைத் தலைவராகியிருக்கிறார் ‘இளைஞர் குல திலகம்’ பவர் ஸ்டார் சீனிவாசன். `அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்’ என்று அதிரடி அரசியல் பிரகடனம் செய்திருக்கும் ’பவர்’, நமக்கு அளித்த பேட்டி முழுக்க அரசியல் ‘ஷவர்’!

நம்ம ஊரு பக்கம் எத்தனையோ கட்சி இருக்கிறப்ப நீங்க ஏன் .கு கட்சியில போய்ச் சேர்ந்தீங்க?

அது ஒண்ணுமில்லண்ணே... நம்ம கட்சியோட தலைவர் சென்ட்ரல் மினிஸ்டரா இருக்காப்ல. ‘ஜான்சன்... அவரோட முழு பேரென்னப்பா?’ (அருகிலிருந்தவரிடம் கேட்கிறார்). ஆங்.. ராம்தாஸ் அத்வாலே. சோத்துக்குச் செத்த கட்சிகள்ல சேர்றதுக்குப் பதிலா, பவரா இருக்கிற கட்சியில சேர்ந்தோம்னா, அத வெச்சு மக்களுக்கு நாலு நல்லது கெட்டது செஞ்சு கொடுக்கலாம் பாருங்க. அதுவுமில்லாம, நம்ம ஊரு கட்சிகள்ல தலைவர்களை அவ்வளவு ஈஸியா பார்க்க விட மாட்டாங்க. பெரிய கட்சிகள்ல நம்மள சீக்கிரம் வளரவும் விட மாட்டாங்க; ரொம்ப காலம் காத்திருக்கணும். ஆனா, இந்தக் கட்சியில பாருங்க... சேர்ந்ததுமே மாநிலத் துணைத் தலைவர் ஆகிட்டேன்.

ஏற்கெனவே, நீங்க பாஜக-வுல இருந்தீங்கள்ல..?

x