“தேவைப்பட்டால்,  என் அக்கா சசிகலாவையும் எதிர்ப்பேன்”- திகில் வெடி வைக்கும் திவாகரன்!


ஜெயலலிதா இருந்தபோது அதிமுக-வின் நிழல் பிம்பமாக இருந்த சசிகலா குடும்பம் இப்போது கலகலத்துக்கிடக்கிறது. மாமன் - மருமகன் சண்டை உச்சத்தைத் தொட்டு சந்திக்கு வந்திருக்கிறது. திவாகரன் - தினகரன் தரப்பினர் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் அறிக்கைகளில் பாஸ்பரஸ் பற்றி எரிகிறது. முன்பு, அடையாறில் உள்ள சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் இல்லத்தின் வாசலில் தவம் கிடந்த மீடியாக்கள், இப்போது (மன்னார்குடி அருகே) சுந்தரக்கோட்டையிலுள்ள சசிகலாவின் தம்பி திவாகரனின் பண்ணை வீட்டைச் சுற்றி வருகின்றன.

அந்த வீட்டின் போர்டிகோவில் பத்து இருபது சேர்கள் போட்டுவைத்திருக்கிறார்கள். பளிச் வேட்டி சட்டையுடன் கூட்டமாய் சிலர் அங்கே உட்கார்ந்து ஆர்வத்துடன் வாட்ஸ் - அப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேருமே தினகரனின்

அமமுகவினர். அதற்கு அடுத்தாற் போலிருக்கும் உள் வராந்தாவில், அடக்கமாய் அமர்ந்திருக்கிறார் திவாகரன் வீட்டு இளவரசர் ஜெயானந்த். நமது வருகையைச் சொன்னதும் இன்னும் கொஞ்சம் பணிவு காட்டும் அவர், நம்மை அந்த வீட்டின் உள்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார். உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் இரண்டு ஏ.சி. அறைகள். வலது பக்கத்து அறையில் திவாகரனைச் சந்திக்க வந்த கட்சிக்காரர்கள். நம்மையும் அங்கே உட்காரவைக்கிறார் ஜெயானந்த்.

இடதுபக்கத்து அறையில் மீடியா ஒன்றில் நேரலையில் பேசிக்கொண்டிருந்தார் திவாகரன். அவருக்காக இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை! அங்கே போவதும் வருவதுமாய் இருந்தார் திவாகரனின் உதவியாளர். அடிக்கடி சிணுங்கியது திவாகரனின் செல்பேசி. ஆனால், அதை அவ்வளவாய் அசட்டை செய்த உதவியாளர், முக்கியமான அழைப்புகளுக்கு மட்டும் செவி கொடுத்துப் பேசினார். பேட்டி முடிந்து வெளியே வரும் திவாகரன்,

x