கோவையைச் சேர்ந்தவர் நஸீமா பர்வீன். ’காலச்சுவடு’, ’மணல்வீடு’ உள்ளிட்ட பல்வேறு இலக்கிய இதழ்களில் சொந்தப் பெயரிலும், புனைப் பெயரிலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ’பெயல்’ அரையாண்டு ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கிறார். சென்ற ஆண்டின் சிறந்த இலக்கிய இதழுக்கான ’நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது’ பெற்றது இந்த ஆய்விதழ்.
எம்.ஏ.தமிழ் இலக்கியம் பயின்ற நஸீமா, தற்போது ‘தற்கால இஸ்லாமிய படைப்புகளில் பெண்ணுடல் அரசியலும்; படைப்பாளி அரசியலும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடிக்க உள்ளார். தனக்குப் ‘பிடித்தவை பத்து’ என அவர் குறிப்பிட்டவை இங்கே:
ஆளுமை: ஆதிக்கங்களுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கான குரலாகவும் ஒலித்த பெரியார், அம்பேத்கர். இவர்கள் இருவரும் என் தேசத்தந்தைகள்.
கதை: விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைக் கதைக்களமாகக் கொண்ட கீரனூர் ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள்; அறிவை அந்நியமாகவும் மனிதர்களை நெருக்கமாகவும் உணரச்செய்கிற மீரான் மைதீனின் சிறுகதைகள்.