திருநெல்வேலி, ஆழ்வார்குறிச்சியில் பிறந்தவர் ஜா வெங்கடேஷ். ‘ராணி முத்து’, ‘கண்மணி’, ‘மதுமிதா’, ‘ஷோபா’, ‘இளவரசி’ ஆகிய மாத, வார நாவல் பத்திரிகைகளைப் படிப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதுவரை 41 நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவருக்குப் பிடித்த 10 விஷயங்கள் இதோ...
ஆளுமை: அன்றைய பாரதியும் இன்றைய விளிம்பு நிலைப் பெண்களும்.
கதை: வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு’ இதிகாசம். அதன் கதை மாந்தர்களின் அன்றாட வாழ்க்கையில் என்னைத் தொலைத்தவள் நான். இனி வைரமுத்துவே நினைத்தாலும் அப்படி ஒரு படைப்பை எழுத முடியுமா என்று வியக்கிறேன்.
கவிதை: முண்டாசுக்கவிஞனின் முரட்டுக் கவிதைகள். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...’ என்பது அதில் ஒரு பதம்!