அடுத்த குறி டாஸ்மாக்தான்- ‘ஐ.பி.எல். அதிரடி’வேல்முருகன்!


சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் திடலுக்குள் பாம்புகளை விடுவோம் என திகில் தினுசில் மிரட்டல் விடுத்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். தாய்மார்களின் தாலிகளை அறுக்கும் மதுக் கடைகளை அடித்து நொறுக்குவோம் என்ற அடுத்த அதிரடி அறிவிப்புடன் அவர் நமக்களித்த பேட்டி.

காவிரி பிரச்சினை தமிழகத்தில் முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்டு விட்டதோ?

மன்னர் காலத்திலிருந்தே காவிரிக்குள் அரசியலும் இருக்கிறது. இருப்பினும் எத்தகைய அரசியல் வாதிகளால் அந்த அரசியல் கையாளப்படுகிறது என்பதுதான் கேள்வி. தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசிடம் மண்டி யிட்டுக் கிடக்கும் கொத்தடிமை ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்க... எதற்குமே அஞ்சாத ஜெயலலிதாவின் வழியில் தங்கள் ஆட்சி நடப்பதாக இவர்கள் சொல்லிக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அதைக்காட்டு மிராண்டித் தனம்என்கிறோம். சென்னையில் ஐபிஎல் போட்டியைப் பார்க்கச் சென்ற தமிழனை இன்னொரு தமிழனே தாக்கியதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

x