அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் கதர் சீருடை- தமிழக அரசு ஏன் சிந்திக்கக்கூடாது?


வெயில் கொடுமையில் தமிழகம் தகித்துக் கொண்டிருக்க, உடலுக்கு இதம் தரும் கதர் சீருடைகள் அணிந்து குளுமையாக பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்!

“இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது. காந்திய வழியில் நடைபெறும் கல்வி நிறுவனம் என்பதால், மாணவர்களின் உடையிலும் அதைப் பின்பற்றுகிறோம். முன்பு, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கதர் வேட்டி சட்டையும், மாணவிகள் கதர் பாவாடை தாவணியும் அணிவது வழக்கமாக இருந்தது. 2011-ல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அதே சீருடை கட்டாயமாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்தப் பள்ளியின் சீருடையும் இளஞ்சிவப்பு மேல்சட்டை, அடர் சிகப்பு கால்சட்டை என்று மாறியது. ஆனாலும்கூட, காந்தியக் கொள்கையைக் கடைபிடிக்கும் வகையிலும், டி.கல்லுப்பட்டியின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறும் நாங்களே அனைத்து மாணவர்களுக்கும் ஒரு செட் கதர் சீருடைகளை வழங்கினோம். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் அதைத்தான் அணிந்து வருகிறார்கள்” என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரராஜ்.

நாம் பள்ளிக்குச் சென்றிருந்தது செவ்வாய்க்கிழமை என்றாலும், அப்போதும் கணிசமான மாணவ, மாணவிகள் கதர் சீருடையே அணிந்திருந்தார்கள். “இதைப் போட்டுட்டு பாலியஸ்டர் துணியைப் போடவே முடியல அண்ணே. மேலெல்லாம் எரியுறமாதிரி இருக்கு.

x