கூட்டுறவு அமைப்புகள் குட்டிச்சுவரானது ஏன்?


கூட்டுறவு சங்கத் தேர்தல் களேபரங்கள் தொடங்கிவிட்டன. சமீபத்தில் நடந்த வேட்பு மனுத்தாக்கலின்போதே சட்டையைக் கிழித்து வேட்டிகளை உருவியிருக்கிறார்கள். கரூரில் ஏற்பட்ட மோதலில் காவல் துறையின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. நெல்லை மீனாட்சிபுரத்தில் ரத்தம் வழிய மண்டையை உடைத்திருக்கிறார்கள். விழுப்புரம் சங்கராபுரம் கூட்டுறவு சங்கத்தை இழுத்துப் பூட்டி சாலை மறியல் செய்திருக்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டி, ஆவடி, கன்னியாகுமரி குமாரபுரம் உள்ளிட்ட இடங்களில் கடும் அமளிதுமளி... இந்தக் கூத்துகளைத் தொடர்ந்து, தேர்தல் நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாகத் தடைவிதித்திருக்கிறது மதுரை உயர் நீதிமன்ற கிளை. நல்லதொரு நோக்கத்துடனும் உயர்ந்த சித்தாந்தங்களுடனும் தொடங்கப்பட்ட கூட்டுறவு அமைப்பின் வரலாற்றில் மிகவும் அவலமான காலகட்டம் இது!

கூட்டுறவுடன் நேருவுக்கு இருந்த உறவு!

கூட்டுறவு என்பது மகத்தான ஜனநாயக இயக்கம். ஏழைகளுக்கான பொருளாதார இயக்கம். 200 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. இதற்கு 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல நாடுகளில் லட்சக்கணக்கான குடும்பங்களை ஏழ்மையிலிருந்து வெளியேற்றி, அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது. இந்தியாவிலும் நம் கூட்டுறவு அமைப்புகள் இது போன்று பல சாதனைகளைச் செய்துள்ளன.

x