அன்பால் ஜெயிக்க அடுத்த திட்டமும் இருக்கு- ’ஒரு தம்ளர் தண்ணீர்’ சிம்பு வாய்ஸ்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் போர்க்கோலம் பூண்டிருக்கிறது. பதிலுக்கு கர்நாடகாவிலும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தண்ணீருக்காக நடிகர் சிம்பு வைத்த நூதன கோரிக்கை கர்நாடகாவில் வேறுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

காவிரி விவகாரத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களே கோபமாகப் பேசியபோது, சிம்பு வைத்த மாற்றுக்கருத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக எதிலும் ஒரு ‘அக்கு’ வைத்தே பேசுகிற சிம்பு, இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் வேறு ரேஞ்சுக்குப் போனார்.

“கன்னடத் தாய்மார்களே, உங்கள் வீட்டில் சமைத்த உணவு மீந்துபோனால், உணவற்ற ஒருவனுக்கு நீங்கள் அதைத் தருவீங்கதானே? இல்லைன்னாலும் அதை நீங்களே சொல்லுங்க. உங்க வீட்டு வாசலில் ஏதோ ஒரு அரசியல்வாதி நின்றுகொண்டு தண்ணீர் கிடையாது என்கிறான். அதை நீ சொல்லு தாயே! காவிரி நீரைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குக் கன்னடர்களாகிய உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைனு எனக்குத் தெரியும். தண்ணீர் கொடுக்க மாட்டேன்னு சொன்னால்தான் ஓட்டு போடணும் என்று அவங்க உங்களைக் கெடுத்து வெச்சிருக்காங்க. இனி அப்படியல்ல என்பதைக் காட்டும் வகையில், ஏப்ரல் 11-ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கன்னட மக்கள் ஒரு குவளை தண்ணீரை கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்குக் கொடுத்து, அதை  வீடியோவா எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுங்க” என்றார் சிம்பு.

அவரது இந்தக் கருத்துக்கு உடனடியாகத் தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லை. சமூக வலைதளங்களில்கூட கேலியும் கிண்டலும்தான் பறந்தன. 

x