பிடித்தவை 10: கலைச்செல்வி, எழுத்தாளர்


திருச்சியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. ‘வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’, ‘மாயநதி’ சிறுகதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத் திங்கள்’ நாவல்களால் புதிய திசை காட்டியவர். பொதுப் பணித் துறை ஊழியர் என்பதால் தனது துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ‘ஏற்றத்துக்கான மாற்றம்’ என்கிற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை விருது, கணையாழி சிறுகதை விருது, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடையின் ‘வளரும் படைப்பாளர்’ உள்பட இவர் அலங்கரித்த விருதுகள் நிறைய. கலைச்செல்விக்கு பிடித்தமான பத்து இங்கே...

பிடித்த இடம்:

பனி மலைகளுக்கிடையே உறைந்துகிடக்கும் மௌனத்தை தரிசிக்க ஆசை.

x