நெருப்பின் நிறம் கறுப்பு!


நெருப்பின் நிறம் கறுப்பு!

ஏப்ரல் 12 அன்று, சென்னைக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதைக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசின் மீது கோபத்தை வெளிப்படுத்தும் நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது தமிழகம். பிரதமர் வருகைக்கு எதிராகச் சாலைகளிலும், வீடுகளிலும் கறுப்புக் கொடிகள் பறந்தன. உடல்நிலை காரணமாக ஓர் ஆண்டுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, கறுப்புச் சட்டை அணிந்துகொண்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலானது. அதோடு #GobackModi என்ற ‘ஹேஷ்டாக்’கை ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டாக்கினார்கள் இணையத் தமிழர்கள்.

கடல் நீரா, காவிரியா?

‘லெட்ஸ் மேக் இஞ்சினீயரிங் சிம்பிள்’ என்ற யுடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ இந்திய அளவில் ட்ரெண்டானது. ‘உண்மையிலேயே தமிழகத்துக்குக் காவிரி தேவைதானா?’ என்ற தலைப்பிலான இந்த வீடியோவில், தமிழர்களுக்குக் காவிரி தேவையில்லை என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுக்கு அறிவுப்பூர்வமாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.

x