தீபாவை நேரில் பார்த்து 40 நாள் ஆகிறது!- எம்ஜெதிமுக தலைவர் மாதவன் ‘சீரியஸ்’ பேட்டி


கட்சியும், ஆட்சியும் சட்டப்படி(?!) ஜெயலலிதாவின் ரத்த வாரிசான எனக்கே சொந்தம் என்று ஜெ.தீபா ஒருபுறம் உரிமைக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் அவரது கணவரும், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மாதவன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பதும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து வாழ்த்தியிருப்பதும் ‘அதிர்வலை’களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் மாதவனோடு ஒரு பேட்டி...

தீபாவை முதல்வராக்குவேன்என்று கட்சி தொடங்கிவிட்டு, இப்போது பழனிசாமியின் ஆட்சி தொடர வாழ்த்தியிருக்கிறீர்களே?

ஒரு குடும்பத்தின் தலைவர் இறக்கிறபோது, அது எந்தக் குடும்பமாக இருந்தாலும் பல சிரமங்களைச் சந்திக்கும். அதையெல்லாம் தாண்டி அம்மாவின் ஆட்சியை வெற்றிகரமாகத் தொடர்வதால், முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து வாழ்த்தினேன். புரட்சித் தலைவி அம்மாவின் மகன் நான். அந்த ஸ்தானத்தில் இருக்கும் என்னைச் சந்திப்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி.

எப்டி சார், படார்னுஜெயலலிதா மகன்னு சொல்லிட்டீங்க?

x