தமிழ் இலக்கணம் சொல்லித்தருகிறார் வடிவேலு!


கேலி, கிண்டலுக்காக தொடங்கப்பட்ட ‘மீம்ஸ்’ கலாச்சாரம், நல்ல கருத்துக்களை சொல்வதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது, ஒரு படி மேலே போய் தமிழ் இலக்கணம் கற்றுக்கொடுக்கும் மீம்ஸ்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. மீம்ஸ் கிரியேட்டர்களின் கதாநாயகனான வடிவேலுவை வைத்து, தமிழ் இலக்கண மீம்ஸ்கள் உருவாக்கப்படுவது இன்னும் பரவலான பார்வையாளர்களை சென்றடைகின்றன. பெரிய விஷயங்களை சின்ன புன்னகையுடன் புரியவைத்துவிடுகின்றன இந்த மீம்ஸ்கள்.

பள்ளி நாடகத்தில் மாணவ அமிதாப்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த நாடகத்தின் புகைப்படம் ட்விட்டரைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. 1956-ல் தனது பள்ளி ஆண்டுவிழாவில் ‘தி ஹாப்பியஸ்ட் டேஸ் ஆஃப் யுவர் லைஃப்’ என்ற நாடகத்தில், ஒரு பள்ளி முதல்வராக நடித்தார் அமிதாப். அதில் அந்தக் கால தொலைபேசியில் அவர் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம்தான் அது. ‘உலக நாடக தினத்தன்று (மார்ச் 27) அமிதாப் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டார்.

x