அம்மா இருந்திருந்தால் நிலைமையே வேறு - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் அதிரடி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நிகராக தமிழக அரசும் கடும் விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. நெருக்கடியின் உச்சத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது அதிமுக அரசு. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில், “மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் தற்கொலை செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என்று பேசி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் அதிமுக எம்.பி-யான நவநீதகிருஷ்ணன். அவர் ’காமதேனு’வுக்கு அளித்த பேட்டி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இத்தனை நாளும் சும்மா கிலுகிலுப்பை ஆட்டிக் கொண்டிருந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் சக்தி யாருக்கும் கிடையாது. தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கணும். அப்படி செய்யாமல் 6 வார அவகாசத்தை சும்மாவே கடத்தியது தவறு என்பது எனது கருத்து.

வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி-க்கள் தற்கொலை செய்துகொள்வோம்என்று நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசியது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?

x